விஜயதசமி தினத்தை முன்னிட்டு இன்று (அக்டோபர் 12) தமிழக அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக அரசு தொடக்கப் பள்ளிகளில் கல்வியாண்டின் தொடக்கமான மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும்.
ஆனால், தனியார் பள்ளிகளில் விஜயதசமி அன்றும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் நிலையில், அரசு பள்ளிகளிலும் இதை பின்பற்றி, இந்த ஆண்டு விஜயதசமி தினத்தை முன்னிட்டு மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்துள்ளன.
