சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் ஜூலை 15ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் பாதியில், மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 61 இலட்சத்து 68 ஆயிரத்து 360 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5 விழுக்காடு அதிகமாகும்.
மூலப் பொருள் சார் தொழிற்துறையின் கூடுதல் மதிப்பு 3 இலட்சத்து 6 ஆயிரத்து 600 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டை விட 3.5 விழுக்காடு அதிகமாகும்.
உற்பத்தி சார் தொழிற்துறையின் கூடுதல் மதிப்பு 23 இலட்சத்து 65 ஆயிரத்து 300 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டை விட 5.8 விழுக்காடு அதிகமாகும்.
சேவை சார் தொழிற்துறையின் கூடுதல் மதிப்பு 34 இலட்சத்து 96 ஆயிரத்து 460 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டை விட 4.6 விழுக்காடு அதிகமாகும்.
முதலாவது காலாண்டில் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு, கடந்த ஆண்டை விட 5.3 விழுக்காடு அதிகமாகும்.
இரண்டாவது காலாண்டில் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு, கடந்த ஆண்டை விட 4.7 விழுக்காடு அதிகமாகும்.