2022ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், உலகப் பாதுகாப்பு முன்மொழிவை முன்வைத்து, சர்வதேச பாதுகாப்புச் சவால்களைச் சமாளிப்பதற்கு சீனத் திட்டத்தை வழங்கினார்.
இவ்வாண்டின் ஜூலை 18ஆம் நாள், உலகப் பாதுகாப்பு முன்மொழிவுக்கான ஆய்வு மையம் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டது. உலகப் பாதுகாப்பு முன்மொழிவைச் செயல்படுத்தும் முன்னேற்றம் பற்றிய முதலாவது அறிக்கையை சீனா வெளியிட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதற்கான கருத்தை சீனா கருத்தில் கொண்டு, சர்வதேச சமூகத்துடன் இணைந்து, உலகப் பாதுகாப்பு முன்மொழிவைப் பன்முகங்களிலும் செயல்படுத்தி, உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதற்கு வலிமைமிக்க இயக்காற்றலை ஊட்டியுள்ளது.
இதுவரை, 100க்கும் மேலான நாடுகளும், சர்வதேச மற்றும் பிரதேச அமைப்புகளும் இம்முன்மொழிவுக்கு ஆதரவு மற்றும் பாராட்டு தெரிவித்துள்ளன.
சீனாவுக்கும், பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்குமிடையிலான 90க்கும் மேலான இரு தரப்பு ஒத்துழைப்பு ஆவணங்களில், இம்முன்மொழிவு மற்றும் தொடர்புடைய மையக் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.