சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு சீனாவுக்கு வருகை தந்த ஜின்பாப்வே அரசுத் தலைவர் எம்மர்சன் ம்னன்கக்வா, அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், ஜின்பாப்வே வளர்ச்சிக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அளித்த ஆதரவு, எனக்கும் நம் குழுவுக்கும் பெரும் ஊக்கம் கொடுத்துள்ளது.
தேசிய வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான பாதையில், சீனாவும் ஜின்பாப்வேவும், ஒன்றை ஒன்று நம்பத்தக்க நண்பர்களாகும். தற்போது இரு நாடுகள், பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை நிறுவியுள்ள நிலையில், மேலும் இரு தரப்புறவை உயர்த்த விரும்புகிறோம்.
கல்வி, அடிப்படை வசதிகளின் கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகள் ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகின்றன.
ஜின்பாப்வேவும் சீனாவும், பிராந்தியம் மற்றும் சர்வதேச அரங்கிலும், ஒன்றுக்கொன்று ஆதரவளித்து வருகின்றன. சவால்களை எதிர்கொள்ளும் போது, இரு நாடுகளின் நிலைப்பாடு ஒன்றாக இருக்கிறது என்று தெரிவித்தார்.