நாடு முழுவதும் பேசு பொருளாக உருவெடுத்து இருக்கும் சன்டிபுரா வைரஸ் 1965 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் சண்டிபுரா என்ற கிராமத்தில் கண்டறியப்பட்டது.
இதனால் இந்த வைரஸுக்கு அந்த பெயர் வந்தது. இந்த வைரஸ் 15 வயதிற்கும் குறைவான உரை தாக்கக்கூடியதாக கூறப்படுகிறது. தீவிர காய்ச்சல், வாந்தி, பேதி மற்றும் வலிப்பு இதன் அறிகுறிகள் ஆகும். இந்த நிலையில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதார மற்றும் தடுப்பு மருந்து துறை இயக்குனர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் குழந்தைகள் இடையே சன்டிபுரா வைரஸ் என்ற வைரஸ் பரவுவதாகவும் இது அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியது எனவும் கொசு மற்றும் ஒருவகை சிறிய வண்டு மூலமாக பரவக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.