போஆவ் ஆசிய மன்றத்தின் 2023 ஆண்டுக் கூட்டம் மார்ச் 28 முதல் 31ஆம் நாள் வரை சீனாவின் ஹைநான் மாநிலத்தின் போஆவ் நகரில் நடைபெற்று வருகிறது.
50க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாண்டுக் கூட்டத்தில் நடைபெறும் சுமார் 50 கருத்தரங்குகள், வட்ட மேசைக் கூட்டங்கள் மற்றும் செய்தியாளர் கூட்டங்களில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, சீன பாணி நவீனமயமாக்கம், ஆசிய மண்டல ஒத்துழைப்பு, உலகப் பொருளாதார எதிர்கால முன்னாய்வு, உலக புவியமைவு அரசியல் கண்ணோட்டம் முதலிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன.
சீன தலைமையமைச்சர் லீச்சியாங் 30ஆம் நாள் இவ்வாண்டுக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்த உள்ளனர். சிங்கப்பூர், மலேசியா, ஸ்பெயின், ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகளின் தலைமையமைச்சர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.