நாகரிகப் பரிமாற்றம் மற்றும் உலக வளர்ச்சி பற்றிய மன்றக் கூட்டம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கட்சி கல்லூரியின் ஏற்பாட்டில் நவம்பர் 7 முதல் 9ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. நாகரிக பரவல் மற்றும் நவீன வளர்ச்சி என்பதை கருப்பொருளாகக் கொண்ட இக்கூட்டத்தின் போது, சீன-ஐரோப்பிய நாகரிகப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர கற்றல், சீன-மத்திய ஆசிய நவீன வளர்ச்சி மற்றும் தலைமை பங்கு கட்டுமானம், சீன-அரபு நாகரிகப் பரிமாற்றம் மற்றும் நவீன வளர்ச்சி ஆகிய கிளைக் கருத்தரங்குகளும், வட்ட மேசை பரிமாற்றமும் நடத்தப்பட்டன.
வேறுபட்ட நாகரிகங்களுக்கிடையே ஆழமான பரிமாற்றம் மற்றும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, உலகளவில் கருத்துகள், அமைப்புமுறைகள், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னேற்றி, அனைவரையும் உள்ளடக்கும் தன்மை, திறப்பு, கூட்டு வெற்றிக்கான ஒத்துழைப்பு, அமைதியான வளர்ச்சி ஆகியவை கொண்ட நாகரிக ஒழுங்கை மறுசீரமைப்பது என்பது இம்மன்றக் கூட்டத்தின் நோக்கமாகும். 30க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியல் தலைவர்கள், தொழில் முனைவோர்கள், சிந்தனை கிடங்கு நிபுணர்கள், சீனாவுக்கான தூதர்கள் உள்ளிட்ட சுமார் 150 விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அதேவேளை, வளரும் நாடுகளின் ஆட்சிமுறை பற்றிய 4ஆவது உயர் நிலை சிந்தனை கிடங்கு மன்றக் கூட்டமும் நடைபெற்றது.