13ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில், சீனா மொத்தம் 216.8 கோடி யுவான் நிதி ஒதுக்கீட்டுடன், Xizang தன்னாட்சிப் பிரதேசத்தின் தொல் பொருள் பாதுகாப்பு, தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு, புரட்சிகரப் பண்பாட்டு நினைவுச் சின்னப் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு, அருங்காட்சியகத்தின் உயர்தர வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் திறன் உயர்வு உள்ளிட்ட துறைகளில் இப்பிரதேசத்தின் தொல் பொருள் லட்சியத்துக்கான ஆதரவை அதிகரித்துள்ளது. Xizang தன்னாட்சிப் பிரதேசத்தின் தொல் பொருள் நிலைமை பற்றி அக்டோபர் 9ஆம் நாள் நடைபெற்ற பணிக் கூட்டத்தில் இத்தகவல் வெளியிடப்பட்டது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, பல்வகை பண்பாட்டு நினைவுச் சின்ன வளங்களை ஆராய்ந்து பதிவு செய்வது, தொல் பொருள் அகழ்வுத் திட்டப்பணிகளை மேற்கொள்வது, தொல் பொருள் பாதுகாப்புக்கான சட்டங்கள் மற்றும் திட்டவரைவுகளை வெளியிடுவது ஆகியவற்றின் மூலம், Xizangகின் தொல் பொருள் பாதுகாப்பு முறைமை மேம்படுத்தப்பட்டுள்ளது.