சீனாவின் சில்லறை விற்பனை வளர்ச்சிக் குறியீடு நவம்பர் மாதத்தில் 50.8 சதவீதத்தை எட்டியதாக சீனப் பொது வணிகச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதில், மின்னணு வணிக குறியீடு முந்தைய மாதத்தை விட 2.8 சதவீத புள்ளிகள் அதிகரித்து, 52.7 சதவீதத்தை எட்டியது. மின்னணு வணிக நிறுவனங்களின் மொத்த விற்பனை குறியீடு 55.6 சதவீதமாகும். இது முந்தைய மாதத்தை விட 6 சதவீத புள்ளிகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிபுணர்களின் பகுப்பாய்வின்படி, மின்னணு வணிக நிறுவனங்களுக்கு முழு ஆண்டின் மிகப் பெரிய விளம்பர பருவம் நவம்பர் ஆகும். இவ்வாண்டின் நவம்பரில், மின்னணு வணிக நிறுவனங்களின் விற்பனை எதிர்பார்ப்புகள் பெரிதும் அதிகரித்துள்ளன.