நோவக் ஜோகோவிச் 28ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினிடம் தோல்வியடைந்த பின்னர், 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக யுஎஸ் ஓபன் நான்காவது சுற்றை எட்டத் தவறினார்.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) ஆர்தர் ஆஷ் ஸ்டேடியத்தில் அலெக்ஸி பாபிரினிடம் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் 4-6, 4-6, 6-2, 4-6 என்ற செட்களில் தோற்றார்.
இதன் மூலம் 2017ஆம் ஆண்டிற்கு பிறகு முதல்முறையாக, இந்த ஆண்டை கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஏதுமின்றி முடிக்கிறார்.
மார்ச் மாதத்திலிருந்து தனது முதல் ஹார்ட்-கோர்ட் போட்டியில் விளையாடும் ஜோகோவிச், முதல் இரண்டு செட்களிலேயே பாபிரின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்.
இதனால் 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைக்கலாம் என நினைத்த ஜோகோவிச்சிற்கு இது பின்னடைவாகியுள்ளது.