2024-ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பை ஏப்ரல் மாதத்தில் இருந்த 4.6 சதவீதம் இலிருந்து 5 சதவீதமாக அதிகரிப்பதாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட புதிய உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் முதல் காலாண்டில் தனியார் நுகர்வு மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக இந்த வளர்ச்சி பராமரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மீட்சி அடைந்த உள்நாட்டு நுகர்வு முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு தூண்டுகோளாக அமைந்துள்ளது.
மேலும் 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சிக்கான முன்னறிவிப்பை 3.2 சதவீதத்தில் பராமரித்து, 2025 முன்னறிவிப்பு 0.1 சதவிகிதப் புள்ளிகள் உயர்த்தி 3.3 சதவிகிதமாக இருக்கும் என்றும், ஆசியாவில் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்கள் உலகப் பொருளாதாரத்திற்கான முக்கிய உந்து சக்தியாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்தது.