ரஷியாவின் மாஸ்கோவில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஏற்பட்ட கடும் உயிரிழப்பு குறித்து சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சீன அரசு மற்றும் மக்களின் சார்பில், உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமுற்றோர் மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மனமார்ந்த ஆறுதலையும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
எந்த வடிவிலான பயங்கரவாதத்தையும் சீனா எதிர்க்கிறது. இப்பயங்கரவாதச் செயலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு ரஷியா மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளுக்கு உறுதியாக ஆதரவளிக்கிறது என்றும் ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.