சீன வேளாண் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொழில் நுட்ப ஆய்வக மாணவர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில், வேளாண் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொழில் நுட்பத் திட்டப்பணியில் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில், ஆழ்ந்த எதிர்பார்ப்பையும் இளைஞர் தின வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இளைஞர்கள் சான்றுகளிலிருந்து உண்மையைத் தேடி, பொது மக்களுடன் நெருங்கிய தொடர்பை மேற்கொள்ள வேண்டும். புதிய யுகத்தில், இளைஞர்கள், மேன்மையான இலக்கை நிலைநாட்டி, வகுப்பில் கற்றுக் கொண்டதை விவசாய நடைமுறையுடன் இணைக்க வேண்டும். வேளாண் மற்றும் கிராமப்புற நவீனமயமாக்கம், பன்முகங்களிலும் சோஷலிய நவீனமயமாக்க நாட்டின் கட்டுமானம் ஆகியவற்றுக்கு இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
வேளாண் நடைமுறையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து, உயர் தர வேளாண் திறமைசாலிகளைப் பயிற்றுவிக்கும் வகையில், தற்போது நாடளவில் 24 மாநிலங்களில் 91 இடங்களில் இத்திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.