சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் நவம்பர் 10ஆம் நாள் பெய்ஜிங் மாநகரம் மற்றும் ஹேபெய் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, இயற்கைச் சீற்றத்துக்குப் பிந்தைய மீட்புதவி மற்றும் மறுசீரமைப்புப் பணியை அறிந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், பல்வேறு நிலை கட்சிக் குழுக்களும் அரசு வாரியங்களும் கட்சி மத்திய கமிட்டியின் கொள்கை முடிவுகள் மற்றும் ஏற்பாடுகளை உணர்வுபூர்வமாக நடைமுறைப்படுத்தி, இயற்கைச் சீற்றத்துக்குப் பிந்தைய மீட்புப் பணியையும் மறுசீரமைப்புப் பணியையும் முயற்சிகளுடன் மேற்கொண்டு, குளிர்காலத்தில் பொது மக்கள் அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தவும் வேலை செய்யவும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், எப்போதுமே மக்களை மையமாகக் கொண்டு, வெள்ளத் தடுப்பு திட்டப்பணி முறைமையையும் அவசர நிலை மேலாண்மை அமைப்புமுறையையும் வேகத்துடன் முழுமைப்படுத்தி, பேரிடர் தடுப்பு, நிவாரணம் மற்றும் மீட்புத் திறனைத் தொடர்ந்து உயர்த்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.