கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் முன்மொழிவை சமர்ப்பித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நடவடிக்கைக்கு ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இது மனிதாபிமானமற்றது என்றும், சுகாதார பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தக்வாகளின் படி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1961ஐ திருத்துவது குறித்து கர்நாடக மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
பணி நேரத்தை சட்டப்பூர்வமாக 14 மணி நேரமாக (12 மணி நேரம் + 2 மணிநேரம் கூடுதல் நேரம்) நீட்டிக்கும் முன்மொழிவு அந்த திருத்தத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஐடி நிறுவனங்கள் விரும்புகின்றன.