தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக நீலகிரி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தொடர்ந்து காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையின் மணல்மேடு பகுதியில் தலா 10 செ.மீ., பெரம்பலுார் (தழுதலை), திருவள்ளூர் (ஊத்துக்கோட்டை) பகுதிகளில் தலா 9 செ.மீ., திருச்சி (புள்ளம்பாடி), தஞ்சாவூர் (பாபநாசம்), திருவாரூர் (திருத்துறைப்பூண்டி), மயிலாடுதுறை (கொள்ளிடம்) ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
