ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் துறைமுகமான ஹொடெய்டாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
சமீபத்தில் இஸ்ரேல் தலைநகர் மீது ஹூதிகள் நடத்திய தாக்குதலுக்கு இதன் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏமன் துறைமுகத்தின் மீது இஸ்ரேல் நடத்தி இருக்கும் தாக்குதல் பெரும் தீ விபத்தையும் புகை மூட்டத்தையும் ஏற்படுத்தியது.
அரேபிய தீபகற்பத்தின் ஏழ்மையான நாடான ஏமன், இஸ்ரேலுக்கு சுமார் 2,000 கிலோமீட்டர்கள்(1,300 மைல்கள்) தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹூதிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் இது போன்ற தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
ஏமன் நாடு மீது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் தாக்குதல்
You May Also Like
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உடனடியாகப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதம்
October 19, 2025
அங்கோலா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர்!
November 11, 2025
