பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற அமைதி மன்றக்கூட்டத்தின் “போட்டியில் ஒத்த கருத்துகளை எட்டுவது” என்ற ஒரு கூட்டத்தில், பிரிட்டனுக்கான முன்னாள் சீனத் தூதர் ஃபூ யிங் அம்மையார் உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், உலகின் தலைவராக இருக்க சீனாவுக்கு விருப்பம் இல்லை. ஆனால், விரைவாக வளர்ந்து வரும் சீனாவால் ஈடு செய்யப்படுவதற்கு அமெரிக்கா கவலைப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்கா சீனாவுடன் நெடுநோக்கு போர் தொடுத்துள்ளது. சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு சான்ஃப்ரன்சிஸ்கோவில் நடைபெறவுள்ளது.
மனம் திறந்த பேச்சுவார்த்தை மூலம், சீன-அமெரிக்க உறவை நிதானப்படுத்தி, உலகளாவிய சவால்களை இணைந்து சமாளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு தெரிவித்தார்.