2025ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் நாடுகளின் நாட்டு ஆட்சி ஆய்வுக்கூட்டமும் மனித பண்பாட்டு பரிமாற்ற மன்றக் கூட்டமும் ஜுன் 30ஆம் நாள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றன.
சீனா, பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, இந்தோனேசியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் மற்றும் தொடர்புடைய சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்த 120க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்பு உலகளாவிய மாற்றங்களில் அதிக உறுதி மற்றும் நிலைத்தன்மையை செலுத்தும் என்ற தலைப்பு குறித்து அவர்கள் விவாதம் நடத்தினர்.
பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்பில், சமமான மற்றும் ஒழுங்கான பன்முனை உலகத்தையும் உள்ளடக்கிய தன்மை கூடிய பொருளாதார உலகமயமாக்கலையும் முனைப்புடன் ஆதரிக்க வேண்டும், உலகளாவிய தெற்கு நாடுகளுக்கிடையே ஆட்டிமுறை அனுபவப் பரிமாற்றங்களை வலுப்படுத்த வேண்டும், நியாயமான உலகளாவிய ஆட்சிமுறை அமைப்புமுறையை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சீனப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சிமுறை ஆய்வுக்கூட்டமும் மனித பண்பாட்டு பரிமாற்ற மன்றக் கூட்டமும், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த துணைபுரியவும், இந்த நிகழ்வுகள் உலகளாவிய தெற்கு நாடுகளுக்கிடையே அறிவுகளின் பகிர்வு மற்றும் நாகரிக உரையாடலுக்கான முக்கிய மேடைகளாக மாறவும் வேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் விருப்பம் தெரிவித்தனர்.