பெரும் கவனம் செலுத்தப்பட்ட அமெரிக்க அரசியல் மற்றும் வணிகத் துறையினரின் சீனப் பயணம்

அண்மையில் அமெரிக்க புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு சீனாவில் பயணம் மேற்கொண்ட முதலாவது அரசியல்வாதியான அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் ஸ்டீவ் டெய்ன்ஸின் சீனப் பயணம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

வர்த்தகப் போரைத் தீவிரமாக்காமல் தவிர்க்க வேண்டும் என்று 23ஆம் நாள் சீன உயர்நிலை அதிகாரிகள் டெய்ன்ஸ் உள்ளிட்ட அமெரிக்க தரப்பினர்களைச் சந்தித்த போது வலியுறுத்தினர்.

மேலும், சீன-அமெரிக்க வர்த்தக மற்றும் பொருளாதாரத்தின் சாராம்சமானது ஒன்றுக்கொன்று நன்மை அளித்து கூட்டு வெற்றி பெறுவதாகும் என்றும் சீனத் தரப்பு தெரிவித்துள்ளது.

டெய்ன்ஸின் பயணத்தையடுத்து, எலி லில்லி அண்ட் கம்பெனி, குவால்காம், ஆப்பிள், பிளாக்ஸ்டோன் குழு உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் பெய்ஜிங்கிற்கு வந்து சீன வளர்ச்சி மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாமல், இவ்வாண்டின் கூட்டத்தில் பங்கேற்ற நிறுவனங்களில் அமெரிக்காவின் நிறுவனங்கள் மூன்றில் ஒரு பகுதியை வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசு உலகளாவிய வர்த்தகப் போரைத் தீவிரமாக்கும் நிலையில், சீனா மற்றும் அமெரிக்காவுக்குமிடை உள்ள ஒத்துழைப்பு நிதானமாக நிலைப்படுத்துவதையே அமெரிக்காவின் பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் விரும்புகின்றன என்பதை இது வெளிக்காட்டியுள்ளது.

 

நுகர்வைத் தூண்டும் வகையில் சீன அரசு வெளியிட்ட பல நடவடிக்கைகள் தங்களைப் பெரிதும் ஊக்குவித்துள்ளதாக டேபஸ்ட்ரி குழுமத்தின் தலைமை செயலாளர் ஜோன் கிரெவோசெராட் பேட்டி அளித்த போது தெரிவித்தார்.

 

பொருளாதார தேசியவாதம் என்ற முழக்கத்தில் வர்த்தகப் போர் தொடுப்பது அமெரிக்காவின் வர்த்தக சமநிலையற்ற நிலைமையை மாற்றி தயாரிப்புத் தொழிலின் மீட்பை முன்னேற்ற முடியாது என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

 

சுங்க வரியைத் தவறாகப் பயன்படுத்துவது உலக தாராள வர்த்தகத்தைச் சீர்க்குலைக்கும். அமெரிக்காவும் சார்ந்திருக்கும் உலக உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலி அமைப்பு முறையையும் சீர்க்குலைக்கும். இது அமெரிக்காவின் மூலதனம் மற்றும் நிறுவனங்களின் உலகளாவிய நலனைப் பாதிக்கும் என்று பகுத்தறிவார்ந்தவர்கள் தெளிவாக அறிந்திருந்துள்ளனர். 

Please follow and like us:

You May Also Like

More From Author