அறுசுவைகளும்.. அதன் ஆரோக்கிய குணங்களும்..

Estimated read time 0 min read

அறுசுவைகள் –ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு சுவை உள்ளது அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

கல்லீரல்;

கல்லீரலுக்கு பிடித்த சுவை என்றால் புளிப்பு . கல்லீரலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் .இந்த சமயங்களில் நம் உடலானது எதிர்ச்சியாக  புளிப்பு சுவையை நாடும் .அதாவது லெமன் ஜூஸ் குடிப்போம். இப்படி இயற்கையாகவே ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு சுவை ஈர்க்கப்படுகிறது.

சிறுகுடல்;

சிறுகுடலுக்கான சுவை கசப்பு சுவையாகும்.சிறுகுடல் நம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்களை பிரிக்கும் வேலையை செய்கிறது. உதாரணமாக ஒரு சிலர் என்னதான் சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். அப்படி இருப்பவர்களுக்கு வயிற்றில் பூச்சி இருக்கும் என்று வேப்பிலைகளை அரைத்து கொடுப்போம். இவ்வாறு அதற்குரிய சுவையை கொடுக்கும்போது அதன் வேலை சரியாக நடக்க ஆரம்பிக்கிறது.

அது மட்டுமல்லாமல் காய்ச்சல் இருக்கும் சமயத்தில் வாய் கசப்பாக இருக்கும் இந்த நேரத்தில் நம் உடலானது கசப்பை நாடுகிறது. கசப்பு சுவை நம் உடலுக்கு தேவைப்படுகிறது என்று புரிந்து கொண்டு அந்த சுவையை கொடுக்கும்போது உள்ளுக்குள் ஏதேனும் நோய் தொற்று இருந்தால் குணமாக்கப்படுகிறது . இதனால்தான் மருத்துவர்கள் காய்ச்சல் சமயத்தில் நிலவேம்பு கசாயம் அருந்த சொல்கிறார்கள்.இதுபோல் நம் உடலின் மொழிகளை புரிந்து கொள்ள வேண்டும்.

மண்ணீரல்,வயிறு ;

வயிறு மற்றும் மண்ணீரலுக்கான வேலை என்னவென்றால் செரிமானம் முடிந்த பிறகு அந்த சத்துக்களை ரத்தத்தில் சேர்க்கும் பணியை செய்கிறது. இதற்குரிய சுவை இனிப்பாகும். அதனால்தான் விசேஷ வீடுகளில் வயிற்றுக்குப் பிடித்த இனிப்பு சுவையை முதலில் வைக்கிறார்கள்.

பெருங்குடல் மற்றும் நுரையீரல்;

இதற்கு உரிய சுவை காரமாகும்.. சளி பிடித்தால் நாம் என்ன செய்வோம் என்று யோசித்துப் பாருங்கள். நம்மை அறியாமலே இஞ்சி ,மஞ்சள் தூள் ,மிளகு போன்ற காரச் சுவை உடையவற்றை பயன்படுத்துவோம். சுவையின் குணங்களை அறிந்து தான் நம் முன்னோர்கள் பல மருத்துவ முறைகளை அந்த காலத்திலேயே பின்பற்றியுள்ளனர்.

கிட்னி;

சிறுநீரகம் நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்கிறது .இதன் சுவை உவர்ப்பு ஆகும். கிட்னியின் வேலைப்பாடு குறைவாக இருக்கும் பட்சத்தில்  உப்பு  எடுத்து கொள்ளலாம். இதுவே கிட்னியில் ஏதேனும் பிரச்சனை வந்துவிட்டால் உப்பின் அளவை குறைக்க வேண்டும். இப்படி நம் எடுத்துக்கொள்ளும் சுவைகளின் அடிப்படையை கொண்டு தான் நம் உடலின் நோய்கள் குணப்படுத்தப்படுகிறது.

ஆகவே நம் உண்ணும் உணவு அறுசுவையாகவும் சரிவிகித உணவாகவும் இருந்தால் உடலின் ஆரோக்கியம் பேணிகாக்கப்படும் .

Please follow and like us:

You May Also Like

More From Author