சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் போது, சீன-பிரெஞ்சு இளைஞர்களின் உரையாடல் மே 5ஆம் நாள் பாரிஸில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி, சீன ஊடகக் குழுமம், பாரிஸ் அரசியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம், பாரிஸின் ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கமிட்டி, சீனாவின் ஜிநான் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் கூட்டாக நடத்தப்பட்டது.
சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென்ஹைய்சியோங், பிரான்ஸின் முன்னாள் பண்பாட்டுத் துறை அமைச்சரும், கல்வித் துறை அமைச்சருமான ஜாக் லாங் முதலியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரைநிகழ்த்தினர்.
ஷென்ஹைய்சியோங் கூறுகையில், சீன-பிரெஞ்சு உறவு நிறுவப்பட்ட கடந்த 60ஆண்டுகளில், இரு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து ஒத்துழைப்புகளில் நிறைய சாதனைகளைக் கூட்டாகப் படைத்துள்ளன.
புதிய யுகத்தில் சீனாவின் தனிச்சிறப்பைப் பற்றியும் நவீன நாகரிகத்தைக் கட்டியமைப்பதில் சீன தேசத்தின் உயிராற்றலைப் பற்றியும் மேலதிக இளைஞர்கள் அறிந்து கொள்ளச் செய்யும் வகையில், சீன ஊடகக் குழுமம் பரிமாற்றம் மற்றும் புரிந்துணர்வுக்கான மேடையைத் தொடர்ந்து உருவாக்கும் என்றார்.