47-ஆவது உலக தொழில்திறன் போட்டி செப்டம்பர் 15ம் நாளிரவு பிரான்ஸின் லியோன் நகரில் நிறைவுபெற்றது. நடப்பு போட்டியின் 59 பிரிவுகளில், சீனா 36 தங்க பதக்கங்களை வென்று முதலிடம் வகித்துள்ளது. மேலும், பதக்கங்களின் மொத்த எண்ணிக்கை, குழுவின் மொத்த மதிப்பெண்கள் ஆகியவற்றிலும் சீனா முதலிடம் பிடித்தது.
உலக தொழில்திறன் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். தொழில்திறன் துறையில் மிக உயர் நிலை மற்றும் மிக அதிக செல்வாக்கு வாய்ந்த இந்த போட்டி, உலக தொழில்திறன் ஒலிம்பிக் என பெருமை பெறுகிறது. தொழில்முறை திறன் வளர்ச்சியின் உலகின் மிக மேம்பட்ட நிலையையும் அது பிரதிநிதிப்படுத்துகிறது.
திட்டப்படி, அருமையான எதிர்காலத்தை உருவாக்கும் தொழில்திறன் என்ற கருப்பொருள் கொண்டு, 48ஆவது உலக தொழில்திறன் போட்டி 2026ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்காயில் நடைபெறும்.
உலக தொழில்திறன் போட்டியில் 36 தங்க பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது சீனா
