அமெரிக்காவின் மிகப் பெரிய அண்டை நாடாகவும் நெருங்கிய கூட்டணியாகவும் கனடா திகழ்கின்றது அதேளேவையில், ஐந்து கண்கள் கூட்டணியின் உறுப்பு நாடாகவும் கனடா விளங்குகின்றது. இருப்பினும், அமெரிக்கா தனது சுய நலன்களுக்காக கனடா மீது கருணையின்றி கூடுதல் வரி வசூலிக்கும். சமீபத்தில், அமெரிக்காவின் தீர்மானத்தை மாற்றம் செய்வதை கேட்டுக்கொள்ளும் விதம், கனடாவில் உள்ள 13 மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த ஆளுநர்களும் கூட்டாக அமெரிக்காவுக்குச் சென்று, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், வணிகக் குழுக்கள் மற்றும் தொழிலாளர்கள் குழுக்களின் தலைவர்கள் ஆகியோரை சந்தித்தனர்.
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு தொடர்பாக, கனடா தலைமையமைச்சர் ஜஸ்டின் துரூடோ உள்ளிட்ட அரசியல்வாதிகள், சமரசம் செய்துகொள்ள போவதில்லை என்று கூறினாலும், பொருளாதார மற்றும் வர்த்தக துறைகளில் உண்மையில் கனடா அமெரிக்காவை பெரிய அளவில் சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்காவின் எஃகு மற்றும் அலுமினியங்களின் மிகப் பெரிய இறக்குமதி நாடாக, கனடா விளங்குகிறது. அமெரிக்காவால் அடிக்கடி அவமானத்துக்குள்ளாகும் கனடா அது பற்றி கவலைப்படாமல் அமெரிக்காவை எதிர்க்க முடியாத சூழ்நிலையில், சீனாவுக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறது. எடுத்துக்காடாக, கனடா, அமெரிக்காவைப் பின்பற்றி, சீனத் தயாரிப்புகளுக்கு கூடுதல் வரி வசூலிக்கவும், சீனாவின் முக்கிய துறைகளிலான முதலீட்டை தடுக்கக் கூடும் என்று அண்டாரியோ மாநில ஆளுநர் டக் ஃபோர்ட் கூறினார்.
அமெரிக்காவின் கொள்கையின் கீழ், சீனாவை கேடயமாகப் பயன்படுத்தும் செயல்களினால் உலகத்தின் ஏளனத்துக்கு உள்ளாவதைத் தவிர கனடாவுக்கு வேறு எந்தப் பயனும் கிடைக்காது.