டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணியில் உள்ள மாநில முதல்வர்கள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெறும் நிலையில் அதனை புறக்கணித்ததற்கான காரணத்தை முதல்வர் ஸ்டாலின் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, இந்த முறை இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த மக்களை பழிவாங்கும் நோக்கில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது. அரசு என்பது வாக்களிக்காத மக்களுக்காகவும் செயல்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை பல்வேறு மாநில மக்கள் புறக்கணித்து விட்டனர்.
இதனால் தங்களை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் நோக்கத்தில் பட்ஜெட்டை ஒன்றிய அரசு தயாரித்துள்ளது. மேலும் மேலும் தவறு செய்தால் நிச்சயம் தோல்வியை சந்திப்பீர்கள் என்று கூறியுள்ளார்.