பயணிகள் கவனத்திற்கு…! இன்று முதல் மின்சார ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!! 

Estimated read time 1 min read

சென்னை அருகே தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நேற்று சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இரவு நேரத்தில் மட்டும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மற்றும் நாளை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 2 நாட்களும் முன்னதாக அறிவிக்கப்பட்டபடி காலை மற்றும் இரவு நேரத்தில் ரத்து செய்யப்படும். அதற்கு பதில் சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும்.

இந்த ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் நிலையில் கடற்கரையில் இருந்து பல்லாவரத்திற்கு இரவு 11:59 மணிக்கும், பல்லாவரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 12.45 மணிக்கு இயக்கப்படும். அதன் பிறகு கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டுக்கு இரவு 11:55 மணிக்கும், மறு மார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு இரவு 11 மணிக்கு கடைசி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

இதனையடுத்து ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் பகல் நேர கால அட்டவணைபடி ரயில் சேவை இயக்கப்படும். மேலும் ஏற்கனவே அறிவித்தபடி சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 3 முதல் 14ஆம் தேதி வரை பகல் மற்றும் இரவு நேரங்களில் ரயில் சேவையானது ரத்து செய்யப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author