ஆடி கிருத்திகை 2024 -கிருத்திகை நட்சத்திரத்தின் சிறப்புகளும் வழிபடும் முறைகளும்..

Estimated read time 1 min read

Devotion -ஆடிக்கிருத்திகையின் சிறப்புகள் ,ஆடி கிருத்திகை வரும் தேதி, நேரம் மற்றும்  வழிபாட்டு முறைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஆடி கிருத்திகையின் சிறப்புகள் ;

ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாக இருந்தாலும் அந்த மாதத்தில் ஒரு நாளை தன் மகனுக்காக அம்பாள் ஒதுக்கி வைத்துள்ளார்.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்து கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டவர் தான் நம் தமிழ் கடவுள் முருகப்பெருமான். அவரை வளர்த்த கார்த்திகை பெண்களை கௌரவிக்கும் விதமாக  சிவபெருமான் கார்த்திகை நட்சத்திரம் அன்று  அவர்களை போற்றி அன்றைய தினத்தை முருகப்பெருமானின் வழிபாட்டிற்கு உகந்த தினமாக வழங்கினார். இந்த கார்த்திகை நட்சத்திரம் தான் கிருத்திகை நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது .

மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் வருடத்தில் மூன்று கிருத்திகை மிகச் சிறப்பாக கூறப்படுகிறது. 1. ஆடி கிருத்திகை. 2, தை மாதம் வரும் கிருத்திகை.3 , கார்த்திகை மாதம் வரும் பெரிய கார்த்திகை. இந்த ஆடி மாதம் வரும் கிருத்திகை அன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடத்தப்படுகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது பக்தர்கள் காவடி எடுத்து தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்துகிறார்கள்.

கிருத்திகை நட்சத்திரம் தொடங்கும் நாள் மற்றும் நேரம்;

கிருத்திகை நட்சத்திரம் ஜூலை மாதம் 29ஆம் தேதி திங்கள் கிழமை சூரிய உதயத்திற்கு பின் துவங்கி  செவ்வாய்க்கிழமை மதியம்  முடிவடைகிறது. திருத்தணியில் 29 ந்தேதி ஆடி கிருத்திகை கொண்டாட படவுள்ளது. பழனி மற்றும் திருசெந்தூரில் ஜூலை 30 ந்தேதி  கொண்டாட படுகிறது .

திங்கள் கிழமை காலையில் குளித்துவிட்டு சர்க்கோணம் கோலமிட்டு அதில் சரவணபவ எழுதி விளக்கேற்றி பால் அல்லது பழம் என உங்களால் முடிந்தவற்றை நெய்வேத்தியமாக படைத்து முருகனின் மந்திரங்களான கந்த சஷ்டி கவசம் ,கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல்மாறல், திருப்புகழ் இவற்றில் ஏதேனும் ஒன்றை பாராயணம் செய்யலாம் அல்லது  ஓம் சரவணபவ என்ற ஒரு மந்திரத்தை உச்சரித்து முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

கிருத்திகை விரதம் கடை பிடிப்பவர்கள் செவ்வாய் கிழமை மதியம் விரதத்தை முடித்து கொள்ளவது சிறப்பு .

பலன்கள்;

கிருத்திகை விரதம் கடைப்பிடித்து வழிபாடு செய்பவர்களுக்கு செவ்வாய் தோஷத்தால்  ஏற்படும் பாதிப்பு குறையும் ,கர்ம வினை விலகும் . திருமண தடை விலகும், சொந்த வீடு அமையும். செவ்வாய் தசை நடப்பவர்கள் இந்த கிருத்திகை விரதத்தை மேற்கொள்ளலாம். மேலும் முருகன் முன் வைக்கும் எந்த ஒரு கோரிக்கையாக இருந்தாலும் அது நிறைவேற்றப்படும்.

என்னதான் முருகப்பெருமான் பிறந்தது விசாக நட்சத்திரமாக இருந்தாலும் கிருத்திகை நட்சத்திரம் அதிலும் ஆடி கிருத்திகை வெகு விமர்சையாக முருகப்பெருமானின் பிறந்தநாளுக்கு இணையாக கொண்டாடப்படுகிறது. எனவே அன்றைய தினத்தை தவறவிடாமல் கிருத்திகை விரதத்தை மேற்கொண்டு முருகப்பெருமானின் அருளையும் ஆசியையும் பெறுங்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author