தென் மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை! சனிக்கிழமை முதல் கனமழைக்கு வாய்ப்பு  

Estimated read time 1 min read

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வெள்ளிக்கிழமை காலை உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, பிப்ரவரி 20 முதல் 25-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

You May Also Like

More From Author