2 மாதத்தில் மீண்டும் திமுக ஆட்சி – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

Estimated read time 1 min read

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய உரையாற்றினார்.

அவர் தனது ஆட்சியின் சாதனைகளை நினைவுகூர்ந்து, எதிர்காலத்தில் திராவிட மாடல் 2.0-ஐ செயல்படுத்துவதாக உறுதியளித்தார். பேரவையில் அவர் ஆற்றிய உரை மிகுந்த உணர்ச்சிபூர்வமாகவும், நன்றியுணர்வுடனும் அமைந்திருந்தது.

முதலமைச்சர் கூறுகையில், “234 தொகுதிகளையும் என்னுடைய தொகுதிகளாக நினைத்து நான் செயலாற்றி உள்ளேன். என்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி.

மிகப்பெரிய வாய்ப்பு தந்த தமிழ்நாடு மக்களுக்கு நன்றி” என்றார். அடுத்த 2 மாதத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், தமிழ்நாட்டு மக்களும் அதை நிரூபிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர், “இயக்கத்தின் வளர்ச்சிக்கும், ஆட்சியின் சிறப்புக்கும் என்னில் பாதியாக துணை நிற்கும் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

அவரது பங்களிப்பு ஆட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும், இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் உறுதியளித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த ஸ்டாலின், “அவை கண்ணியத்தை கடைபிடித்து குறைகளை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.-க்கு நன்றி. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்றில்லாமல் என் மீது எப்போதும் அன்பு காட்டும் உறுப்பினர்களுக்கு நன்றி” என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் இன்று வரவில்லை என்றாலும், அவரையும் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.முதலமைச்சர் தனது உரையை நிறைவு செய்யும் போது, “எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும். உறுதியாக மீண்டும் வென்று ஆட்சிக்கு வந்து, தமிழ் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவோம்” என்று கூறினார்.

ஆட்சிக்கு வந்த முதல் நாள் மன அழுத்தத்தை உணர்ந்ததாகவும், ஆட்சி முடியும் நேரத்தில் சந்தோஷமாக உணர்வதாகவும் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்தார். இந்த உரை பேரவையில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author