“47 வருஷத் தவம் முடிஞ்சது” ரஜினி – கமல் இணையும் மெகா மூவி…. நாளை 12.07-க்கு ஆரம்பமாகுது ‘ஆட்டம்’….!! 

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திரையில் இணைந்து நடிக்கப் போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 1970-களில் பல படங்களில் இணைந்து நடித்த இவர்கள், அதன் பிறகு தனித்தனி பாதையில் பயணித்து முத்திரை பதித்தனர். தற்போது பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்த ‘மெகா கூட்டணி’ மீண்டும் அமைந்திருப்பது ரசிகர்களிடையே உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படத்தின் ப்ரோமோ வீடியோ நாளை மதியம் சரியாக 12.07 மணிக்கு வெளியாகிறது. வெறும் யூடியூப்பில் மட்டும் வெளியிடாமல், குறிப்பிட்ட சில திரையரங்குகளில் இந்த ப்ரோமோ வீடியோவை திரையிட படத் தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதுதான் தற்போதைய ஹாட் டாபிக். ஒரு முழு படத்திற்கே இல்லாத அளவுக்கு, ஒரு சிறு ப்ரோமோ வீடியோவுக்கு தியேட்டர் புக்கிங் நடப்பது சினிமா வரலாற்றில் இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author