அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள சீன வணிக அமைச்சர் வாங்வென்டோவ், மே 26ஆம் நாள் வெள்ளிக்கிழமை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்ரின் ச்சி தையைச் சந்தித்துரையாடினார்.
சீனப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவு, பொது அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் பலதரப்பு கருப்பொருட்கள் குறித்து இரு தரப்பினரும் வெளிப்படையான பரிமாற்றம் மேற்கொண்டனர்.
சீனாவுடனான அமெரிக்காவின் பொருளாதார மற்றும் வர்த்தகக் கொள்கைகள், பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையில் தைவான் தொடர்பான பிரச்சினைகள், இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு, 301ஆம் சுங்கவரி உள்ளிட்ட முக்கியக் கருப்பொருட்கள் குறித்து சீனத் தரப்பு கவனம் தெரிவித்தது.
தவிரவும், பரிமாற்றத்தையும் தொடர்பையும் நிலைநிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.