சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு கொண்டாட்டத்துக்கான ‘நானும் எனது சீனக் கதையும்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 25ஆம் நாளிரவு கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் வெற்றிகரமாக நடைபெற்றது.
சீன ஊடகக் குழுமத்தால் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைமை இயக்குநருமான ஷென்ஹய்சியோங் காணொளி வழியாக உரைநிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ‘நானும் எனது சீனக் கதையும்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியைச் சீன ஊடகக் குழுமம் உலகளாவிய நிலையில் நடத்தத் தொடங்கியது.
இந்நிகழ்வின் மூலம் 60க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் சீனாவுடனான சுமார் 1600 கதைகளை விளக்கிக் கூறியுள்ளனர். நாங்கள், சர்வதேச மானிடப் பண்பாட்டுப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி உலக நாகரிக பேச்சுவார்த்தை மற்றும் மக்களிடையே உள்ள தொடர்பை முன்னேற்றுவதை கடமையாகக் கொண்டு மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைக்கும் பாதையில் கைகோர்த்து கொண்டு முன்னேறி, அத்தியாயத்தைக் கூட்டாகப் படைப்பதை முன்னேற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு கொண்டாட்டத்துக்கான ‘நானும் எனது சீனக் கதையும்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 28ஆம் நாள் அமரிக்காவின் நியுயார்க்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.