சீனாவின் நுகர்வுச் சந்தையின் வளர்ச்சிப் போக்கு 2024-ஆம் ஆண்டில் நிதானமாக இருந்தது.
சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் 15-ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சீனப் பொருளாதார உயர் தர வளர்ச்சியின் சாதனைகள் பற்றி வணிகத் துறை அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் விளக்கினார்.
2024ஆம் ஆண்டு சீன சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 43 லட்சத்து 85 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 5 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் வெளிநாட்டுத் திறப்பை சீனா தொடர்ந்து விரிவாக்கி, உயர் தர வளர்ச்சியை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொலை தொடர்பு, மருத்துவ சிகிச்சை, கல்வி உள்ளிட்ட துறைகளில் சோதனை முறையில் திறப்புப் பணியை சீனா விரிவாக்கும் என்று வணிகத் துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.