பிரான்சு அரசின் அழைப்பின் பேரில் அந்நாட்டில் பயணம் மேற்கொள்ளவும், புதிய உலக நிதித்திரட்டல் உடன்படிக்கைக்கான உச்சிமாநாட்டில் கலந்து கொல்ளவும், சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங் ஜுன் 21ஆம் நாள் பிற்பகல் சிறப்பு விமானம் மூலம் பாரிஸின் ஓர்லி விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
உயர்நிலையில் வளர்ந்து வரும் சீன-பிரான்சு உறவு, இருதரப்பு நோக்கத்துக்கு மேலான உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்தது. பிரான்சுடன் இணைந்து, இருநாட்டு அரசுத் தலைவர்கள் வரைந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று திறப்பை விரிவாக்கி, பண்பாட்டு பரிமாற்றத்தை வலுப்படுத்தி, உலகின் அமைதி, நிலைப்பு மற்றும் வளர்ச்சிக்கு மேலதிக நம்பிக்கை மற்றும் வலிமையை ஊட்ட சீனா விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.
அன்றிரவு சீன-பிரான்சு தொழில் மற்றும் வணிக துறையினர்களுடனான விருந்தில் லீ ச்சியாங் கலந்து கொண்டு, உரை நிகழ்த்துகையில் சீன-பிரான்சு ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கு 3 அம்ச முன்மொழிவை வழங்கினார். முதலாவதாக, உலகளாவிய தொழில் மற்றும் வினியோகச் சங்கிலிகளின் நிலைத்தன்மையைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும். இரண்டாவதாக, இருதரப்பு புத்தாக்க ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். மூன்றாவதாக, தொழில் புரிவதற்கு சீரான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.
பிரான்சு பயணத்தின் போது, அந்நாட்டின் அரசுத் தலைவர், தலைமை அமைச்சர் ஆகியோருடன் லீ ச்சியாங் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் அவர் அழைப்பின் பேரில் புதிய உலகளாவிய நிதித்திரட்டல் உடன்படிக்கைக்கான உச்சிமாநாட்டில் பங்கெடுக்க உள்ளார்.