நாளை (ஜூலை 1) முதல், ஆன்லைனில் தட்கல் டிக்கெட் முன்பதிவை மேற்கொள்ளும் பயணிகள் தங்களின் ஆதார் எண்ணை IRCTC கணக்குடன் கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையால், ஆன்லைன் தட்கல் டிக்கெட் விற்பனையில் வெளிப்படைத்தன்மை ஏற்படுவதுடன், போலி கணக்குகள் மற்றும் சட்டவிரோத செயலிகள் மூலம் ஏற்படும் துஷ்பிரயோகங்களும் கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார் எண்ணை இணைக்காத பயணிகள், எதிர்காலத்தில் ஆன்லைன் மூலம் தட்கல் டிக்கெட் பெற முடியாது; அவர்கள் நேரடி ரயில்வே கவுன்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.
நாளை முதல் ஆதார் இணைப்புடன் மட்டுமே ஆன்லைன் தட்கல் டிக்கெட்
