சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் நவம்பர் 11ஆம் நாள் கூறுகையில், தாய்லாந்தின் தலைமையமைச்சர் அனுடின் சார்ன்விரகுலின் அழைப்பை ஏற்று, சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் நவம்பர் 13 முதல் 15ஆம் நாள் வரை தாய்லாந்தில் அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்றார்.
மேலும், ஆசியான் நாடுகளின் நடப்பு தலைவர் நாடான பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் ஃபெர்டினாண்ட் ரோமுவால்டெஸ் மார்கோஸின் அழைப்பை ஏற்று, சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், நவம்பர் 15,16 ஆகிய நாட்களில், அந்நாட்டின் மணிலா நகரில் நடைபெறும் 29வது சீன-ஆசியான் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
