சீனா தற்சார்பாக வடிவமைத்துத் தயாரித்த, 8ஆயிரத்து 200 கனமீட்டர் எல் என் ஜி ஏற்றிச்செல்லக் கூடிய கப்பல், 7ஆம் நாள் அதிகாலை, ஜியாங் சூ மாநிலத்தின் ஜி டுங் நகரின் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, சோதனை பயணம் மேற்கொண்டது.
இக்கப்பல், 113 மீட்டர் நீளம், 20 அகலம் மற்றும் 13.5 மீட்டர் ஆழம் கொண்டுள்ளது. மின்சார உந்து விசை மூலம் செயல்படும் இக்கப்பல், சரக்கு கப்பலாகவும், எல் என் ஜி ஏற்றிச்செல்லும் கப்பலாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதனால், பரந்துபட்ட எதிர்கால வாய்ப்பு இதற்கு உள்ளது.
இக்கப்பலுக்குள் எல் என் ஜி கலம் அனுப்பும் முயற்சி, சாய்ந்த மேடையில் மேற்கொள்ளப்பட்டது. இது உலகளவில் முதல்முறையாகும் என்று பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.