நவராத்திரியின் நான்காம் நாளில் அம்பிகையை மகாலட்சுமியின் திருநாமத்தாலேயே வழிபட வேண்டும். நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய மலர், பழம் கிடைக்கவில்லை என்றாலும், அந்த நாளுக்குரிய பிரசாதம் செய்து, படைத்து வழிபட முடியவில்லை என்றாலும் வருத்தப்பட தேவையில்லை. அவரவர்களால் என்ன முடிகிறதோ அந்த பொருட்களை வைத்து எளிமையாக அம்பிகையை வழிபட்டால் அதை ஏற்றுக் கொண்டு, அருள் செய்வாள். நம்முடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைவதற்கு என்ன தேவையோ அதை அருள வேண்டும் மகாலட்சுமியிடம் வேண்டிக் கொள்ளும் நாள் இது. இந்த நாளில் என்ன பிரசாதம், மலர்கள் படைத்து, மகாலட்சுமியை எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரி 4ம் நாள் வழிபாடு :
அம்பிகையின் பெயர் – மகாலட்சுமி
கோலம் – படிக்கட்டு வகை கோலம்
மலர் – ஜாதிமல்லி
இலை – கதிர்பச்சை
நைவேத்தியம் – கதம்ப சாதம்
சுண்டல் – பட்டாணி சுண்டல்
பழம் – கொய்யா பழம்
ராகம் – பைரவி
நிறம் – கருநீலம்
சொல்ல வேண்டிய மந்திரம் :
1. மகாலட்சுமி மந்திரம் : “ஓம் ஹ்ரீம் யம் வம் வைஷ்ணவ்யை”.
2. லட்சுமி காயத்ரி மந்திரம் :
“ஓம் அம்ருத வாசினி வித்மஹே
பத்ம லோசனி தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்”
3. சக்தி வாய்ந்த மகாலட்சுமி மந்திரம் :
“ஓம் ஸ்ரீம் மஹா லக்ஷ்மியே நமஹ”
4. மகாலட்சுமி பீஜ மந்திரம் :
“ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா”.
நவராத்திரியின் நான்காம் நாளில் லலிதா சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம் உள்ளிட்ட மந்திரங்களை பாராயணம் செய்வதும், மகாலட்சுமியின் 108 திருநாமங்களை சொல்லி அர்ச்சனை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும்.