போஆவ் ஆசிய மன்றத்தின் துவக்க விழாவில் லீச்சியாங்கின் உரை
சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் 30ஆம் நாள் போஆவ் ஆசிய மன்றத்தின் 2023ஆம் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழாவில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட ஆசிய சமூகத்தைக் கைக் கோர்த்து கொண்டு உருவாக்க வேண்டும். ஒத்துழைப்பின் புதிய நிலையைப் படைத்து உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மேலதிக உறுதித் தன்மையைக் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.
உறுதியற்ற உலகத்தில், சீனாவின் உறுதித் தன்மை உலக அமைதி மற்றும் வளர்ச்சியைப் பேணிக்காப்பதற்கான முக்கிய ஆதரத்தூண் ஆகும்.
சீனாவின் வளர்ச்சி இலக்கு மற்றும் எதிர்காலம் உறுதியாக இருக்கும். நிலைப்புத் தன்மையுடன் வளர்ச்சிக்குப் பெரும் கவனம் செலுத்தித் திறப்பு மற்றும் பகிர்வு மனப்பான்மையுடன் நடத்து வரும் சீனா, உலகின் செழுமை மற்றும் நிலைப்புத் தன்மைக்குப் பெரும் உந்து ஆற்றலாகப் பங்காற்றும் என லீச்சியாங் வலியுறுத்தினார்.
சிங்கப்பூர் தலைமை அமைச்சர், ஸ்பெயின் தலைமை அமைச்சர், மலேசியத் தலைமை அமைச்சர், கோட்டிவா தலைமை அமைச்சர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர், 50க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல், தொழில் மற்றும் வணிகம், சிந்தனைக் கிடங்குகளின் சுமார் 1500 பிரதிநிதிகள் இத்துவக்க விழாவில் பங்கேற்றனர்.