கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆவிய பகுதிகளில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் ஏராளமானோர் அதில் சிக்கி உள்ளனர். இந்த நிலச்சரிவில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் பலியாகயிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கூடலூர் அருகே புளியம்பாறை என்ற பகுதியில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவர் கட்டிட வேலைக்காக கேரளா சென்ற நிலையில் தற்போது நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு பணிகள் இணைந்து தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.