தேசிய அளவிலான 4ஆவது பாரம்பரிய சீன மருந்து வளக் கணக்கெடுப்புப் பணியில், மொத்தம் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தாவர மாதிரிகள் சேகரிப்பட்டன. இதன் அடிப்படையில், 3 புதிய பேரினங்கள் மற்றும் 196 புதிய இன வகைகள் சர்வதேச புகழ்பெற்ற கல்வியியல் இதழில் வெளியிடப்பட்டன. சீன பாரம்பரிய மருத்துவ அறிவியல் கழகத்திலிருந்து ஏப்ரல் 2ஆம் நாள் இத்தகவல் வெளியிடப்பட்டது. இந்த புதிய இனங்களின் கண்டுபிடிப்பு, சீனாவின் உயிரின வளங்களை தெளிவாக அறிந்து கொள்வதற்கும், பாரம்பரிய சீன மருந்து களஞ்சியத்தை செழுமைப்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
புள்ளிவிரங்களின்படி, இந்த கண்டுபிடிப்புகளில் சுமார் 60 விழுக்காட்டுக்கு மேலான இன வகைகள் மருந்தாகப் பயன்படுத்தப்பட முடியும். அடுத்த கட்டப் பணியாக, இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.