சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் பிராஞ்சு அரசுத் தலைவர் மக்ரோனும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஏப்ரல் 6ஆம் நாள் மாலை செய்தியாளர் சந்திப்பில் பங்கெடுத்தனர்.
ஷி ச்சின்பிங் கூறுகையில்,
இருதரப்புறவின் நிலைத்தன்மையைப் பேணிக்காக்க வேண்டும். ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வளர வேண்டும். மனித பண்பாட்டு பரிமாற்றத்தை மீண்டும் தொடங்க வேண்டும். ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்து உலக நிர்வாகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்கு இரு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன என்று தெரிவித்தார்.
உக்ரைன் நெருக்கடி குறித்து ஷி ச்சின்பிங் கூறுகையில்,
பேச்சுவார்த்தை மற்றும் அரசியலின் மூலம் உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்பதில் சீனா உறுதியாக உள்ளது. சர்வதேச சமூகம் தன்னடக்கத்துடன் செயல்பட்டு, சர்வதேச மனித நேய சட்டத்தைப் பின்பற்றி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற வாக்குறுதியை நிறைவேற்றி, அமைதி பேச்சுவார்த்தையை வெகுவிரைவில் தொடங்க வேண்டும் என்று பிரான்ஸுடன் இணைந்து சீனா வேண்டுகோள் விடுக்கிறது என்று தெரிவித்தார்.