சீன-பிரான்ஸ் தொழில் முனைவோர் கமிட்டியின் 5வது கூட்டத்தின் நிறைவு விழாவில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பிரான்ஸ் அரசுத் தலைவர் இமானுவேல் மக்ரோனுடன் ஏப்ரல் 6ஆம் நாள் பிற்பகல் கூட்டாகப் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-பிரான்ஸ் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், இரு நாட்டுப் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்துக்கான நலன்களை முன்னேற்றும் அதேவேளையில், உலகப் பொருளாதார மீட்சிக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது. தற்போது, பல்வேறு துறைகளில் சீன-பிரான்ஸ் மற்றும் சீன-ஐரோப்பிய பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புகள் பன்முகங்களிலும் மீண்டும் துவங்கியுள்ளன. வாய்ப்புகளை இறுகப்பற்றி, ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இனிமையான எதிர்காலத்தை நாம் கூட்டாக உருவாக்க வேண்டும் என்றார்.
மேலும், திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மையைக் கடைபிடித்து, இரு தரப்பு ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்புகளை ஆழமாக்க வேண்டும். தற்சார்பில் ஊன்றி நின்று, சீன-ஐரோப்பிய தரப்புகளின் பொது நலன்களைப் பேணிக்காக்க வேண்டும். ஒற்றுமையுடன் உலகக் கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.