கோவையில் உள்ள நேரு மைதானத்தில் அக்னிவீர் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 1 இன்று தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் முகாமில் கலந்து கொள்வதற்கான அனுமதி சீட்டை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் ஆண்கள் ஆகிய இரு பாலினரும் சேர முடியும் அக்னி வீடு திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30,000 சம்பளமாக வழங்கப்படும் அதேசமயம் இவர்களுக்கு பென்ஷன் கிடையாது.
ஆனால் தனிப்பட்ட இன்சூரன்ஸ் மற்றும் மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்கப்படும். மேலும் இந்த நான்கு வருட பனிக்காலத்தில் போர்க்களத்தில் சண்டையில் காயங்கள் ஏற்பட்டாலோ காயத்தை பொறுத்து 44 லட்சம் ரூபாய் வரை நிவாரணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.