கசகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் குழுவின் 24வது கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
இதில் கலந்துகொள்ளும் விதம், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜூலை 2ஆம் நாள் முற்பகல், சிறப்பு விமானம் மூலம் பெய்ஜிங்கிலிருந்து அஸ்தானாவுக்குப் புறப்பட்டார்.
இம்மாநாட்டைத் தொடர்ந்து கசகஸ்தான் அரசுத் தலைவர் டோகாயேவ், தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் எமோலி ரஹ்மோன் ஆகிய இருவரின் அழைப்புக்கிணங்க, இவ்விரு நாடுகளில் ஷிச்சின்பிங் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.