சென்னை: துறை ரீதியிலான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடத்துவதற்கு கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. இந்த பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை ரீதியிலான கேள்விகளுக்கு மட்டும் அமைச்சர்கள் பதில் கூறாமல், பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டனர்.
இதில் இன்று முக்கிய முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி, நாமக்கல் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த கோரி அமைச்சர் கே.என்.நேரு நேற்று சட்டப்பேரவையில் முன்வரைவை தாக்கல் செய்து இருந்தார். இந்த முன்வரைவு, இன்று சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
அதே போல இன்று மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையில் இருந்து கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை, 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டத்திருத்தம், காவல்துறை பற்றிய மானிய கோரிக்கைகளில் புதிய அறிவிப்புகள் ஆகியவை இன்று நிறைவேற்றம் செய்யப்பட்டன.
The post மாநகராட்சியாக மாறும் 4 நகராட்சிகள்.. சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு.! appeared first on Dinasuvadu.