மார்ச் 15ஆம் நாள் பெய்ஜிங்கில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உலக அரசியல் கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் உரைநிகழ்த்தினார். நவீனமயமாக்க வளர்ச்சியை ஆய்வு செய்வதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் புரிதலை விளக்கி கூறிய ஷிச்சின்பிங், நவீனமயமாக்கம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
அப்போது, நனவீனமயமாக்கம் தொடர்பாக அவர் 5 அறிவுரைகளை கூறினார். மக்களை முதன்மையாக வைத்திருப்பதில் ஊன்றி நிற்பது, சுதந்திர அடிப்படையில் நவீனமயமாக்கப் பாதையின் பன்முகதன்மையை ஆய்வு செய்வது, புத்தாக்கக் கருத்தை நிலைநாட்டி நவீனமயமாக்கப் போக்கின் தொடர்வல்ல தன்மையை நிலைநிறுத்துவது முதலிய உள்ளட்டங்கள் இடம்பெறுகின்றன.
நவீனமயமாக்கம் என்பது சிறுபான்மை நாடுகளுக்கு மட்டுமே சொந்தமான தனிக்காப்புரிமை அல்ல என்றும், மற்றவரின் நலனைப் பாதிப்பதன் மூலம், கூடுதலான வளர்ச்சி அடைய செய் முடியாது என்றும் ஷிச்சின்பிங் உரையில் குறிப்பிட்டார். நவீனமயமாக்கத்துக்கு முன்னேறும் ஒரு நாடு நவீனமயமாக்க வளர்ச்சி விதிகளைப் பின்பற்றுவதுடன், தனது நாட்டின் நிலைமையின்படி செயல்பட வேண்டும். மட்டுமல்லாமல், வளர்ச்சி வாய்ப்பை கூட்டாகப் பகிர்வு செய்வதில் ஊன்றி நிற்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் தன் உரையில் தெரிவித்துள்ளார்.