ஜூனில் 26ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா

திரைப்பட நகரம் என்ற கருப்பொருளில், 26ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா வரும் ஜூன் 14 முதல் 23ஆம் நாள் வரை நடைபெற உள்ளது.

அதேவேளையில், 29ஆவது ஷாங்காய் தொலைக்காட்சி விழா அதே மாதத்தின் 24 முதல் 28ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.
தொலைக்காட்சி விழாவில் பைய்யூலான் விருதுகளுக்கான போட்டியில் பங்கெடுப்பதற்கு உலகின் 57 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து சுமார் ஆயிரம் படைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள. பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விருதுகள் ஜூன் 28ஆம் நாள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author