ஷிச்சின்பிங் சீன அரசுத் தலைவராகப் பதவியேற்ற 8 ஆண்டுகளில், வறுமை ஒழிப்பு என்ற மாபெரும் மக்களின் வாழ்வாதார திட்டப்பணிக்குத் தலைமை தாங்கினார்.
கிராமப்புறங்களில் சுமார் 10கோடி மக்களை வறுமையிலிருந்து விடுவித்து உலகப் பொருளாதார வரலாற்றில் அதிசயம் ஒன்றைப் படைத்தார். மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மக்களின் வறுமையை ஒழித்து ஓரளவு வசதியான வாழ்க்கையை நனவாக்கும் வாக்குறுதியையும் நிறைவேற்றினார்.
மக்களை மையப்படுத்தும் வளர்ச்சி கண்ணோட்டத்தை ஷிச்சின்பிங் முன்வைத்தார். இது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் ஒட்டுமொத்த திட்டத்தை வகுப்பதற்கான கோரிக்கையாகவும், புதிய யுகத்தில் சீனா சீர்த்திருத்தத்தை ஆழமாக்குவதற்கான இலக்காகவும் மாறியுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீர்த்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்குவதற்கான அடிப்படை நோக்கம் என்பது, சமூகத்தின் நீதி மற்றும் நியாயத்தை முன்னேற்றி சீர்த்திருத்தத்தின் சாதனைகளை மேலும் நியாயமான முறையில் மேலும் அதிகமான சீன மக்களை அனுபவிக்கச் செய்வதாகும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.