ஆசிய கலாச்சார பாரம்பரியக் கூட்டணி மாநாட்டிற்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
இதில் மனிதகுல நாகரிகத்தின் முக்கிய வித்திட்ட இடமான ஆசியாவில் மிகச் செழுமையான கலாச்சாரச் செல்வங்கள் உள்ளன. உலக நாகரிக வளர்ச்சி வரலாற்றில் இது முக்கிய இடம் வகிக்கின்றது என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
ஆசிய கலாச்சார பாரம்பரியக் கூட்டணியானது ஆசிய கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாப்புக்கு துணை புரியும் என்று அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டணியின் கீழ் கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்புத் துறையில் பல்வேறு ஆசிய நாடுகளுடன் சீனா தனது அனுபவங்களைப் பகிர்ந்து மனித குல நாகரிகத்தின் முன்னேற்றத்தைக் கூட்டாக விரைவுப்படுத்த விரும்புகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.